முடிய..ல.. !! நிலநடுக்கத்திலும் லைவ் ஷோ !! செய்தி வாசிப்பாளர் அலப்பறை வீடியோ!!

 
நிலநடுக்கத்தில் செய்தி

பாகிஸ்தானில் மார்ச் 21ம் தேதி இந்துகுஷ் மலைப்பகுதியில் 6.6ரிக்டர் அளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்ட இந்த  நிலநடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர். பாகிஸ்தானில் 150 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்நிலையில் பாகிஸ்தான் டிவி செய்தி வாசிப்பாளர் நிலநடுக்கத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செய்தி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.



ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டில்லி, காஷ்மீர், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.  இரவு முழுவதும் தெருக்களிலேயே அச்சத்தில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ளூர் பாஷ்டோ டிவி சேனலான மஹ்ஷ்ரிக் டிவியின் செய்தி தொகுப்பாளர், நிலநடுக்கத்தால் முழு ஸ்டுடியோவும் குலுங்கியது. அப்போதும் அசராமல் அமைதியாக செய்தியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்.  இந்த வீடியோவில்   குறிப்பிட்ட  அந்த செய்தி அறையில் அவருக்குப் பின்னால் உள்ள தொலைக்காட்சித் திரைகள் மற்றும் பிற உபகரணங்கள் வலுவான ஆட்டம் கண்டன.  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்  உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லையே எனக் கலாய்த்துள்ளனர்.  

நிலநடுக்கம்

சிலர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 50000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல் சரிந்தன. இந்த கோர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவில் மீட்பு பணிகள் இன்னும் முழுவதுமாக முடிவடையவில்லை. இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!