மிளகாய் தூள் கலந்த கொதிநீரை ஊற்றி கணவர் கொலை!! மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

 
டயானா மேரி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தில் செல்வராஜ் ( 27), டயானா மேரி(22) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆட்டோ ஓட்டுநரான செல்வராஜ் அடிக்கடி மது அருந்துவிட்டு போதையில் விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலை  நீடித்ததால் 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு டயானா மேரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் பேசியும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.

டயானா மேரி

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் பேசிய  செல்வராஜ், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் ஒப்புக் கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் அங்கேயே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற டயானா மேரி வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார். 

டயானா மேரி

இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து  செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web