குழந்தைகளை குறி வைத்து தாக்கும் எண்ட்ரோவைரஸ் !!உலக சுகாதார மையம் எச்சரிக்கை!!

 
எண்ட்ரோவைரஸ்

கடந்த சில வாரங்களாகவே  ஐரோப்பா முழுவதும்   என்டரோவைரஸ் பரவி வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  ஜூன்26ம் தேதி நிலவரப்படி புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 17 என்டரோவைரஸ் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  குரோஷியா, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து  நாடுகளில் இந்த பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  இந்த பாதிப்புக்களால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஸ்பெயினில் ஒருவர் பலியாகியுள்ளார். ஐரோப்பாவை தொடர்ந்து அமெரிக்காவிலும்  குழந்தைகளிடையே என்டோவைரஸ் தொற்று அதிகரிப்பதாக  உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

எண்ட்ரோவைரஸ்


என்டரோவைரஸ் என்பது எக்கோவைரஸ், காக்ஸ்சாக்கி வைரஸ், என்டோவைரஸ் மற்றும் போலியோவைரஸ்   ஆகியவை வைரஸ்களின் குழுவிற்குப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும். இந்த வைரஸ் லேசான தொற்றுநோயை உருவாக்கினாலும், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஆபத்தாக முடியலாம் .கை, கால் மற்றும் வாய் நோய், அழற்சி தசை நோய், தோல் வெடிப்பு, வைரஸ் மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி ஆகியவை சில அறிகுறிகள்.  உலகம் முழுவதும் அடுத்தடுத்து பரவும் இந்த என்டரோவைரஸ் தொற்றுகள் அசாதாரணமானது நிகழ்வு அல்ல. இதற்கு முன்  காணப்பட்ட நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் லேசானவை. ஆனால், தற்போது என்டரோவைரஸின் இறப்பு விகிதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளிடையே இந்த ஆபத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.  

எண்ட்ரோவைரஸ்

ஐரோப்பா முழுவதும் என்டோவைரஸ்  பரவல் காரணமாக அமெரிக்காவிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .  இந்தியாவை பொறுத்தவரை மே2022ல்  பிறந்த குழந்தைகளிடையே தக்காளி காய்ச்சல் கேரளாவில் பரவியது.   'தக்காளி காய்ச்சல்' என்பது கை, கால் மற்றும் வாய் தொற்று எனப்படும் என்டரோவைரஸ் நோய்த்தொற்றின் ஒரு புதிய மாறுபாடு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.   2003 ல் இந்தியா தனது முதல் என்டரோவைரஸ் பாதிப்பை பதிவுசெய்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம் மற்றும் அந்தமான் தீவுகளில் என்டரோவைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி புதிய வைரஸ் பரவல் எதுவும் பதிவாகவில்லை. ஆனால் நோய்த்தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web