காலையில் பரபரப்பு... அல் ஃபலா பல்கலை உட்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
தில்லி செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை, கடுமையான நெரிசலுக்குள் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் சேர்ந்த அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரியானா, ஃபரிதாபாத்தில் உள்ள பல்கலைக்கழக தலைமையகம் மற்றும் தில்லி, ஃபரிதாபாத்தில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய அல்-ஃபலா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திகியின் தம்பி மஹ்மூத் அஹ்மத் சித்திகி (50) ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் இந்த பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்படவில்லை; 25 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் தான் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
