விஜய் டிவி பிரபலத்துக்கு நிச்சயதார்த்தம்!! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
நாஞ்சில் நாடன்

விஜய் தொலைக்காட்சியில்  அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு  என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர்   மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் . தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை பெரும்பாலும் பெண் வேடங்களில் தான் நடித்து வருகிறார்.  

இவரை ரசிக்கவே தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களிலும் தலைக்காட்டியுள்ளார்.  
 கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் காமெடி நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் பங்கேற்று வருகிறார். வத்திக்குச்சி என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நாஞ்சில் விஜயன் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது.

நாஞ்சில் விஜயன்
இந்நிலையில் நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவரது நிச்சயதார்த்தம் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனது அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web