மெட்ரோ பணியில் கிர்டர்கள் சரிந்ததில் இன்ஜினியர் பலி... L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம்!

 
எல் அண்ட் டி
 


சென்னை  ராமாபுரத்தில்  ஜூன் 12ம் தேதி  இரவு 9:45 மணிக்கு  மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது  மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே 75 கிலோ எடை கொண்ட  இரண்டு I-கிர்டர்கள்  திடீரென இடிந்து விழுந்தன. இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியர்  தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 10 வயது மகள் உள்ளனர்.

எல் அண்ட் டி

இதனையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில்  சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்  மற்றும் ஒப்பந்த நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டன. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரமேஷின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தால் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

எல் அண்ட் டி
மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இந்த விபத்து குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்டுமானத்தில் ஏற்பட்ட பிழைகளால் கிர்டர்கள் இடிந்ததாகவும், ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவு மற்றும் தற்காலிக A-பிரேம் ஆதரவு அமைப்பில் ஏற்பட்ட தோல்வியே விபத்துக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டது.  
இதைத் தொடர்ந்து, CMRL, L&T நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது. மேலும், விபத்துக்கு நேரடியாக பொறுப்பான L&T-யின் முதன்மை பாதுகாப்பு மேலாளர் , மூத்த ESHS மேலாளர், பாதுகாப்பு பொறியாளர், மற்றும் பொது ஆலோசகரின் மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய 4 பொறியாளர்கள் மெட்ரோ திட்டப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

விசாரணை அறிக்கையில், கிர்டர்களுக்கு முறையான ஆதரவு அளிக்கப்படவில்லை,  33.3 மீட்டர் நீளமுள்ள I-கிர்டர்களை தாங்குவதற்கு தேவையான டர்ன்பக்கிள் மற்றும் A-பிரேம் அமைப்புகள் போதுமான வலிமையுடன் இல்லை எனவும்  தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கான்கிரீட், A-பிரேம், மற்றும் டர்ன்பக்கிள் ஆகியவற்றின் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் பாதுகாப்பு ஆய்வு உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மவுண்ட்-பூந்தமல்லி சாலை மற்றும் IT காரிடரில் உள்ள அனைத்து I-கிர்டர்களையும் பரிசோதித்து, கூடுதல் ஆதரவு கம்பிகள் மற்றும் வெல்டிங் மூலம் பலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரமேஷின் குடும்பத்துக்கு CMRL சார்பில் ரூ.5 லட்சமும், L&T நிறுவனம் சார்பில் ரூ.20 லட்சமும் உடனடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டன.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது