லஞ்சம் கேட்ட இன்ஜினியர் ரசாயனம் தடவிய பணம் வாங்கியதும் தட்டித் தூக்கிய காவல்துறை!

 
செல்லூர்
 

மதுரை செல்லூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பழனிக்குமார் (42), 2022ஆம் ஆண்டு காரியாபட்டி பேரூராட்சியில் ₹1.38 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை மேற்கொண்டார். முதல் கட்டமாக ₹1.14 கோடி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ₹24 லட்சத்திற்கான இறுதிப் பில் விடுவிப்பதற்காக பேரூராட்சியின் ஜூனியர் இன்ஜினியர் கணேசன் (54), ₹3.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக பழனிக்குமார் புகார் அளித்தார். முதல் தவணையாக ₹50,000 தர வேண்டும் என்று இன்ஜினியர் வற்புறுத்தியதும் கூறப்பட்டது.

லஞ்சம் பணம் ஊழல்

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழிமுறைகளின்படி, ரசாயனம் தடவப்பட்ட ₹50,000 பணத்தை பழனிக்குமார், கணேசனிடம் பேரூராட்சி அலுவலகத்திலேயே வழங்கினார். அப்போது பதுங்கியிருந்த ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை குழு, கணேசனை பணம் பெற்ற அதே நேரத்தில் புத்றியுடன் கைது செய்தது. லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அலுவலகத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

போலீஸ்

பின்னர் கணேசனின் பள்ளத்துப்பட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ₹9 லட்சத்து ₹23,000 ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்பினர். இந்த லஞ்ச வழக்கு காரியாபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!