ஆங்கில புத்தாண்டு... கோவில்களில் சாமி தரிசனத்திற்கு குவிந்த மக்கள்!
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிகாலை முதலே தமிழகத்தில் ஆலயங்களில் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சென்னை வடபழனி முருகன் கோவில் , மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் , திருச்செந்தூர் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டையொட்டி பொதுமக்கள் காலை முதலே கோவில்களில் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜை நடைபெற்ற நிலையில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. வேளாங்கண்ணி தேவாலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலங்களில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!