பொங்கல் லீவை என்ஜாய் பண்ணுங்க... யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு... !

 
யுஜிசி நெட் தேர்வு யுஜிசி நெட் தேர்வு

 
 இந்தியாவில் யுஜிசி நெட் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் பொங்கல் விடுமுறையான நாளை ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதனையடுத்து, பொங்கல் தினத்தன்று தேர்வா? என சில பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர்.  

அதன்படி சு.வெங்கடேசன் எம்.பி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தேர்வு தேதியை தள்ளிவைக்கவேண்டும் பொங்கல் தேதியில் தேர்வு நடக்க கூடாது என எதிர்ப்புக்குரல் தெரிவித்திருந்தனர்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வுகளை நடத்தக் கூடாது என மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம்  எழுதியிருந்தார்.

 

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்


இதனையடுத்து,  நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 15, 2025 அன்று பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் பிற பண்டிகைகளை முன்னிட்டு UGC – NET டிசம்பர் 2024 தேர்வை ஒத்திவைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இந்த வேண்டுகோளுக்கிணங்க  ஜனவரி 15, 2025 அன்று திட்டமிடப்பட்டிருந்த UGC-NET டிசம்பர் 2024 தேர்வை   ஒத்திவைக்க தேசிய தேர்வு முகமை  முடிவு செய்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஜனவரி 16, 2025 அன்று திட்டமிடப்பட்ட தேர்வு முந்தைய அட்டவணையின்படி நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

 

 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!