அரைகுறையாய் டிரெஸ் பண்ணிக்கிட்டு திரியுறா... ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!

 
சப்னா

மோகித் குமார் (28) - சப்னா தம்பதிக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இளம்பெண் சப்னா எப்போதும் மார்டன் வகை ஆடை அணிவதில் விருப்பம் கொண்டவர். ஆனால் அவரது மார்டன் வகை ஆடை கவர்ச்சியாக இருப்பதாக இதற்கு கணவர் மோகித் குமார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

சப்னா உடுத்தும் ஆடை தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு நேற்றும் நடந்துள்ளது. சப்னா தகாத முறையில் ஆடை உடுத்தினார் எனக்கூறி கணவர் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் பெரிதாக மாறி உள்ளது.

சப்னா

இதில் ஆத்திரமடைந்த மோகித், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி சப்னாவை கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் வீட்டிலேயே உயிரிழந்தார். மோகித் வீட்டில் கேட்ட சத்தம்கேட்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து விட்டு அருகிலேயே அமர்ந்திருந்த மோகித்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சப்னா

விசாரணையில், பொது இடங்களில் தகாத முறையில் உடை அணிய வேண்டாம் என நான் பலமுறை எச்சரித்து உள்ளேன். இதனால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. ஆனால் அவர் கேட்கவில்லை கோபத்தில் கொலை செய்து விட்டேன், எனத் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலத்தில் காஜிபூர் கிராமத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web