லாக்கப் மரணம்.., ஜெய்பீம் படத்தால் உள்ளம் உலுக்கியது... என சினிமா Review எழுதிய பொம்மை முதல்வர் எங்கே? இபிஎஸ் கண்டனம்!

 
இபிஎஸ்
 


தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி இளைஞர் அஜீத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் லாக்கப் விசாரணையில் உயிரிழந்தார்.   இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணையின்போது, அஜித் மயங்கி விழுந்ததாகவும், உடனடியாக திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அஜித்தின் உறவினர்கள், காவலர்கள் அவரை கடுமையாகத் தாக்கியதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன்  இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இது “லாக்-அப் மரணம்” என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.  இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி   தனது எக்ஸ் பக்கத்தில், ”திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது” என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக் கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்” என பதிவிட்டுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது