பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுங்க முதல்வரே.... இபிஎஸ் கண்டன அறிக்கை!

சென்னையில் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) February 17, 2025
அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன.…
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக செய்திகள் வெளியானது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அதே பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்தி உட்பட பல ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வலம் வருவதாக செய்திகள் வருகின்றன. பெண் காவலருக்கே பொது இடத்தில் இப்படியொரு கொடுமை நடக்கிறது எனில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை.
பொது இடத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறலும், ஆயுதக் கலாச்சாரமும் தனிப்பட்ட விஷயங்கள் என்று இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடக்க முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவையெல்லாம் சட்டம் ஒழுங்கில் தான் வரும் என்பதாவது இன்றைக்கு முதல்வராக இருக்கும் திரு.மு.க.ஸ்டாலின்-க்கு தெரியுமா? பெண் காவலர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுக்க தலைதூக்கியுள்ள ஆயுதக் கலாச்சாரத்தை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமடி ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!