நான் பேசும்போதெல்லாம் இபிஎஸ் அவையில் இருப்பதில்லை ... உதயநிதி பளீச்!

சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசிய போது அவசர பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஒரு தடவை கூட நான் சட்டப்பேரவையில் பதில் கூறும் போது இருப்பதில்லை.
"நான் பதில் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதில்லை. தொடர்ந்து பார்த்துட்டுதான் இருக்கேன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக எனது காரை எடுத்துச் செல்ல முயற்சித்தார். நானும் ஒன்றும் பிரச்சனை இல்லை எடுத்து செல்லுங்கள் ஆனால் கமலாலயம் பக்கம் சென்று விடாதீர்கள் எனக் கூறினேன்.
அப்போது ஓபிஎஸ் எங்களது கார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என கூறினார். ஆனால் தற்போது டெல்லியில் 3 கார்கள் மாறி மாறி சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி என கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!