இபிஎஸ்–பியூஷ் கோயல் ரகசிய சந்திப்பு.... 2026 தேர்தல் வியூகம்… !

 
பியூஷ் கோயல்
 

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியை, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் நீண்ட நேரம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சிபுரத்தில் வடிவமைப்பு வள மையத்தை மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

இந்த சந்திப்பில் கூட்டணி வாய்ப்புகள், தொகுதிப் பங்கீடு, தேர்தல் உத்திகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் 70 தொகுதிகள் வரை கேட்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக தொடங்காத தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இது தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

பியூஸ் கோயல் எடப்பாடி

திமுக அரசை எதிர்கொள்ள வலுவான கூட்டணி அமைப்பதே இரு கட்சிகளின் நோக்கம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 2021 தேர்தலுக்குப் பிறகு பிரிந்த அதிமுக–பாஜக, மீண்டும் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்தால், 2026 தேர்தலில் புதிய அரசியல் திருப்பம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!