ஜூலை 7 முதல் இபிஎஸ் தொடர் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணம்!

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அதற்கான பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாக கொண்டு ஜூலை 7-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதற்கட்ட தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த சுற்றுப் பயணத்தை ஜூலை 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார். பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
12-ம் தேதி கடலூர் மாவட்டம் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகள், 14-ம் தேதி குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகள், 15-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகள், 16-ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஆகிய தொகுதிகள், 17-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து, 18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம், 19-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு, 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!