நாளை மோடியை சந்திக்கும் EPS?
கோவையில் நாளை தொடங்க உள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிலையில், அவரைச் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை கொடிசியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு தனிப்பட்ட சந்திப்பு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தலைவர் EPS நாளை கோவையில் மோடியை நேரில் சந்திக்க தேவையான நேரம் கேட்டுள்ளதாகவும், இந்த சந்திப்பு நடைபெறப் போவதாக NDA வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் கோவை வருகையைோடு பாஜக தலைவர்களுடனும் ஆலோசனை நடக்க உள்ளது. வரவிருக்கும் தேர்தல்கள், கூட்டணி அமைப்பு, மேலும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக கலந்துரையாடுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
