இபிஎஸ் Vs செங்கோட்டையன்.. யார் கெத்து?! இன்று கோபியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

 
எடப்பாடி இபிஎஸ் பொதுக்குழு

இன்று நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், சமீபத்தில் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்த நிலையில், அவருடைய சொந்த ஊரில் நடைபெறும் இந்தக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் - கோபி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத் திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு தனி அரசியல் வரலாற்றைக் கொண்டது என்று நிர்வாகிகள் கூறுகின்றனர்.

எடப்பாடி இபிஎஸ்

அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது: "1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, இந்தப் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில்தான் எம்ஜிஆர் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி மக்களின் மனதைக் கவர்ந்தார்.

அந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்துவது எங்களுக்குப் பெருமை. இங்கிருந்து பிரசாரத்தைத் தொடங்கி எம்ஜிஆர் அவர்கள் மீண்டும் முதல்வரானதுபோல், எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் முதல்வராவார் என்ற நம்பிக்கையுடன் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்."

சமீபத்தில், அதிமுகவில் இருந்து விலகித் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்த செங்கோட்டையனுக்கு, அவரது சொந்த ஊரான கோபியில் வெள்ளிக்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

எடப்பாடி இபிஎஸ்

இந்தச் சூழலில், அவருக்குச் சவால் விடும் வகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செங்கோட்டையனுடன் தவெகவுக்குச் சென்ற முன்னாள் நிர்வாகிகள் 32 பேரில் 12 பேர் மீண்டும் அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

"கோபியில் செங்கோட்டையனுக்குச் செல்வாக்கு இல்லை, எடப்பாடி பழனிசாமிக்குத் தான் உண்மையான ஆதரவு இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் நிரூபிக்கும்" என்று அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனவே, கோபியின் அரசியல் களம் இன்று சூடுபிடிக்க உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!