அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், சென்னை வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கூட்டணி அமைப்பது தொடர்பான முழு அதிகாரமும் அவருக்கே வழங்கப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் உறுதியளித்தார்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். கிட்னி முறைகேடு, போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட பல வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு ஏன் பயம் என கேள்வி எழுப்பினார். மின் கட்டணம், வரி உயர்வு, வேலைவாய்ப்பு இல்லாமை ஆகியவை மக்களை சிரமப்படுத்துவதாக கூறினார். திமுக அமைச்சர்களின் ஊழல் பணத்தை மீட்டால் மெட்ரோ திட்டங்களையும், பொங்கலுக்கு ரூ.5,000 வழங்குவதையும் அரசு செய்ய முடியும் என்றார்.
அதிமுக சொந்த பலம் கொண்ட கட்சி; திமுக மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றும், அந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். பொங்கல் பரிசாக ரூ.5,000 ரொக்கம் வழங்கக் கோரும் தீர்மானமும், கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பொதுக்குழு கூட்டம் அமைந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
