எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்கள் வெளியீடு… பில் கேட்ஸ் குறித்து சர்ச்சை தகவல்!

 
epsten
 

அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர். இந்த வழக்கில் பல முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் வெளிப்படைத் தன்மை சட்டத்தின் கீழ் இந்த வழக்கின் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிடத் தொடங்கியது. இதனால் புதிய சர்ச்சைகள் உருவாகியுள்ளன.

வெளியிடப்பட்ட ஆவணங்களில் பல முக்கிய பிரமுகர்களுடன் எப்ஸ்டீனுக்கு இருந்த தொடர்புகள் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து குற்றச்சாட்டு கொண்ட மின்னஞ்சலும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை பில் கேட்ஸ் மறுத்துள்ளார். எப்ஸ்டீனுடன் செலவிட்ட நேரத்திற்கு வருந்துகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2011ல் அவரை சந்தித்ததாகவும், பின்னர் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

பெண்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், எப்ஸ்டீன் மூலம் உலக சுகாதார நிதி பெற முயன்றதாகவும் பில் கேட்ஸ் விளக்கம் அளித்தார். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதேவேளை இந்த ஆவணங்கள் வெளியானது தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் எழுப்பியுள்ளது என மெலிண்டா கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!