ஈரோட்டில் பதற்றம்.. ஆளும்கட்சி மீது புகார்.. மத்திய படை வீரர்கள் குவிப்பு!

 
ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுவை திரும்பபெறும் அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து தேர்தலில் இறுதியாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தேமுதிக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி

முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. 

இந்நிலையில் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 2 கம்பெனி மத்திய படை வீரர்கள் ஈரோடு வந்தடைந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை என மொத்தம் 2 கம்பெனியை சேர்ந்த 180 வீரர்கள் வந்தனர். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் மத்திய படைவீரர்கள் பாதுகாப்புபணியில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து இந்தோ- திபெத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஈரோடு வர உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியான திமுகவினர் தொடர்ந்து விதிமீறல், முறைகேடுகளில் ஈடுபடுவதால் துணை ராணுவம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web