ஐரோப்பாவில் முதல் முறையாக இடிபிஎல் தொடக்கம்... கிரிக்கெட்டில் புதிய புரட்சி!

 
இடிபிஎல்

 

ஐரோப்பாவில் முதல்முறையாக ஐரோப்பியன் டி20 பிரீமியர் லீக் எனப்படும் இடிபிஎல் தொடங்கப்பட்டுள்ளது. ஐசிசி அனுமதியுடன் இந்த லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நெதர்லாந்தின் கேன்சிபி, அயர்லாந்தின் சிஐ, ஸ்காட்லாந்தின் சிஎஸ் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து இதனை நடத்துகிறார்கள்.

கால்பந்துக்கு மட்டுமே பெயர் பெற்ற ஐரோப்பாவில் தற்போது கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அமைப்புகள் இந்த லீக்கில் இணைந்துள்ளன. முன்னாள் ஹாக்கி வீரர் ஜேமி வியெர், நியூசிலாந்து முன்னாள் வீரர் கைல் மில்ஸ், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர்.

மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளை பாதிக்காத வகையில் இந்த கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணிகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. ஆம்ஸ்டர்டெம், எடின்பெர்க், பெல்பெஸ்ட் அணிகளின் உரிமையாளர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பாவில் கிரிக்கெட் புதிய வேகத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!