77 வது குடியரசு தின விழாவில் முதன் முறையாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்…!

 
ஐரோப்பிய ஒன்றியம்
 

இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் தலைமை விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவிற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அழைக்கப்படுவது இதுவே முதல் முறை. அவர்கள் ஜனவரி 25 முதல் 27 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகிறார்கள்.

குடியரசு

இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவர்கள் சந்திக்க உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட முறையிலும், தூதுக்குழு அளவிலும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜனவரி 27 அன்று நடைபெறும் 16வது இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிலும் இருவரும் இணைத் தலைமை தாங்குகிறார்கள்.

மோடி

மேலும் இந்தியா–ஐரோப்பிய கவுன்சில் வர்த்தக மன்றத்திலும் அவர்கள் பங்கேற்க உள்ளனர். 2004 முதல் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!