பாஜக எம்எல்ஏக்களிடம் பல கோடி மோசடி !! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
பாஜக

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் நீரஜ் சிங் ரத்தோட். இவர் பெரும் அரசியல்வாதி தோரணையில் காரில் வலம்வந்துள்ளார். மேலும் தன்னை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் நெருங்கிய உதவியாளர் என்றும், தன்னால் பாஜகவில் எதையும் செய்யமுடியும் எனவும் கூறி வந்துள்ளார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏக்களைத் தொடர்பு கொண்டு நீரஜ் சிங் ரத்தோட் பேசியுள்ளார். அப்போது அவர்களிடம், மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது, அமைச்சராக்குகிறேன், முக்கியமான துறைகளை வாங்கித்தருகிறேன் என்று பாஜக எம்எல்ஏக்களிடம் அவர் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார்.

பாஜக

இந்த நிலையில், பாஜக எம்எல்ஏவான விகாஸ் கும்பாரேவிடம் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ.1.66 லட்சத்தை நீரஜ் சிங் ரத்தோட் கேட்டுள்ளார். அப்போது தான் இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து நாக்பூர் போலீசாரிடம் விகாஸ் புகார் செய்தார். 

இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் நீரஜ் சிங் ரத்தோட்டை தேடி வந்தனர். பின்னர் குஜராத் மாநிலம் மோர்பியில் பதுங்கியிருந்த நீரஜ் சிங் ரத்தோட்டை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், நீரஜ் எம்எல்ஏக்கள் பலரை குறிவைத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாரே தவிர நாக்பூரில் உள்ள நாராயன் குசே, டேக்சந்த் சாவர்க்கர் மற்றும் தானாஜி முட்குலே உள்ளிட்ட ஐந்து பாஜக எம்எல்ஏக்கள், விதர்பாவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள், மராத்வாடாவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களை நீரஜ் சிங் ரத்தோட் அமைச்சர் பதவி வாங்கித்தருகிறேன் என்று அணுகியதாக தெரிய வந்துள்ளது.

பாஜக

இதே போல கோவா மற்றும் நாகாலாந்திலும் எம்எல்ஏக்களுக்கு பதவி வாங்கித்தருவதாக கூறி நீரஜ் சிங் ரத்தோட் பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது. ஜே.பி.நட்டா பெயரை பயன்படுத்தி பாஜக எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை அவர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web