"ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் இங்கு எதுவும் மாறாது!" - சீமான்!

 
சீமான்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில், "ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தை ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடினார்: "தமிழ்நாட்டை யார் அதிகமாக நாசம் செய்வது என்பதில்தான் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இடையே போட்டி நடக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே கொள்கை அளவில் எந்த மாற்றமும் கிடையாது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் கொடநாடு விவகாரம் வரை எதிலுமே உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை."

அமித்ஷா விமான நயினார்

விசிக தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசுகையில், "திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என இப்போது திருமாவளவன் கூறுகிறார். ஆனால், திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்று முன்பு கற்பித்ததே அவர்தான். தேவைக்கேற்ப அவர் மாற்றிப் பேசுகிறார்," என்று சீமான் குறிப்பிட்டார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசுகையில், 15 ஆண்டுகளாகப் போராடி வரும் ஆசிரியர்களைக் கைது செய்வது கொடுந்துயரம். மதுவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு ஆசிரியர்களுக்குக் கொடுப்பதில்லை. பொங்கலுக்கு இலவசப் பரிசுப் பொருட்கள் தருவது கேவலமான ஒன்று. அதில் பெருமைப்பட எதுவுமில்லை. கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறலாம், ஆனால் ஆட்சி முறை மாறாது. திராவிடம், இந்தியம் என்கிற இந்த முறையை மாற்றுவதுதான் உண்மையான மாற்றம்.

ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் நாடகம் என்று கூறிய சீமான், "இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைச் சுடச் சொன்னவர் பெரியார். இன்று தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்தி இருக்கிறது. இங்கே பலருக்குத் தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத நிலைதான் உள்ளது," என ஆதங்கப்பட்டார்.

பாஜகவின் அரசியல் நகர்வுகள் குறித்துக் கேட்டபோது, "ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தீய சக்திகளுக்கு மாற்று எங்களைப் போன்ற தூய ஆற்றல்கள் (நாம் தமிழர் கட்சி) மட்டும்தான்" என்று கூறினார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!