கார் இருந்தாலும் எப்பவும் பைக் ரைடிங் தான்... ஒரே மகன் சாலை விபத்தில் பலி... சடலத்துடன் பைக்கையும் புதைத்த பெற்றோர்... !

 
சடலத்துடன் பைக்


 
குஜராத் மாநிலம் நாடியாத்  உத்தரசந்தா கிராமத்தில் வசித்து வந்த 18 வயது இளைஞர் கிரிஷ் பர்மர். இவர்  பைக்கில்  மே 26ம் தேதி ஆனந்த் நகரத்துக்கு கல்லூரி சேர்க்கைக்காக சென்றிருந்தார்.  முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பும் வழியில், அவரின் பைக் ஒரு டிராக்டர் டிராலியில் மோதியது. இந்த விபத்தில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  12 நாட்கள் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலத்துடன் பைக்

கிரிஷ், சஞ்சய்பாய் பர்மரின் ஒரே மகன். இவர்  சமீபத்தில் 12ஆம் வகுப்பு தேர்வை முடித்த அவர், பிசிஏ படிக்கத் தயாராகி இருந்தார். பைக்கை மிகவும் நேசித்த கிரிஷ்,  வீட்டில் கார் இருந்தாலும் கூட பைக்கில்தான் பயணம் செய்ய விரும்புவார்.  அவருடைய இந்த பைக் பற்றிய பாசத்தை உணர்ந்த குடும்பத்தினர், அவரது இறுதி சடங்கில் அதையும் சேர்த்து புதைத்துவிட்டனர்.
கிரிஷின் அப்பா சஞ்சய்பாய் பர்மர்  "அவர் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அவருக்கு பிடித்த பைக்கை கூட அவரோடவே புதைத்தோம். அவருடைய விருப்பங்களை மரணத்திலும் மதிக்கலாம்னு நாங்கள் முடிவு செய்தோம்" என கண்கலங்கக் கூறினார். இறுதிச்சடங்கில் கிரிஷின் உடையுடன் அவரது கண்ணாடி, காலணி, ஆடைகள் மற்றும் அவரது பைக்கும் கல்லறையில் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களையும் உறவினர்களையும் கலங்க வைத்தது.
இந்நிகழ்வு கிராம மக்கள் மத்தியில் பெரும் கவலையையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. கிரிஷின் பைக்குடன் கல்லறையில் வைக்கப்பட்ட அந்த காணொளி சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது