"சங்கி படையே வந்தாலும் தமிழ்நாட்டை வெல்ல முடியாது!" - அமித் ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!

 
ஸ்டாலின் அமித்ஷா

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான அமித் ஷாவுக்கு நேரடியாகச் சவால் விடுத்துப் பேசினார். "உங்களுடையச் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது" என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார்.

இளைஞரணி மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். "மாஸா, கெத்தா இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இளைஞர் அணி மாநாட்டைப் பார்க்கும்போது டைம் டிராவல் செய்து அரை நூற்றாண்டுக்குப் பின்னோக்கிச் சென்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. உங்கள் எனர்ஜி எனக்குள் வந்துள்ளது."

ஸ்டாலின்

மேலும் "உதயநிதி ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என்று எதிரிகள் புலம்புகிறார்கள். தம்பி உதயநிதி தனதுப் பொறுப்பை உணர்ந்து பவர் புல்லாகச் செயல்படுகிறார். இன்னும் சொல்லப் போனால் இறங்கி அடிக்கிறார். அரசியல் அறிவை, அறிவியக்கத்தை வளர்த்தெடுக்கிறார் உதயநிதி. அதுதான் நல்ல அரசியல்வாதிக்கான அடையாளம்" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மாநில அரசியல் மட்டுமல்லாது, தேசிய அளவிலான அரசியலைப் பற்றியும் பேசிய மு.க. ஸ்டாலின், பாஜகவின் மூத்த தலைவருக்கு நேரடியாகச் சவால் விடுத்தார். அமித் ஷாவுக்குப் பதில்: "பீகாரைப் போலத் தமிழ்நாட்டிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சொல்கிறார். அவருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 'அமித் ஷா அவர்களே, உங்களுடையச் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது; தமிழ்நாட்டை வெல்ல முடியாது'."

உதயநிதி

அன்பாக வந்தால் அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடிபணிய மாட்டோம். எதிர்த்து வென்று காட்டுவோம். நாட்டின் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது என்றும் அவர் உறுதியுடன் பேசினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற, இளைஞர் அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய மு.க. ஸ்டாலின், திமுக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். "உங்கள் ஆதரவோடும், மக்கள் ஆதரவோடும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்" என்றும் அவர் தனதுப் பேச்சில் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!