செம!! இனி வாரவிடுமுறை 3 நாட்கள்!! 4 நாட்கள் வேலை செய்தால் போதும்!!

 
job

நாம் பணிபுரியும் நிறுவனத்தில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான். ஆனால் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை என்றால் யார்தான் வேண்டாம் என்பார்கள். அதாவது, வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் பணிநாட்கள் என்றால் மனச் சோர்வை ஏற்படுவத்துவதாக கூறப்படும் நிலையில், வாரத்தில் வெறும் 4 நாட்கள் மட்டுமே பணி என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது.இந்த திட்டம் குறித்து பலரும் தங்களது கருத்தினை கூறி வந்தாலும், செயல்பாட்டில் சரிபட்டு வருமா? பெருநிறுவன முதலாளிகள் இதற்கு சம்மதம் அளிப்பார்களா என்பது பெரும் கேள்வியாக இருந்தது.

job

ஆனால் இந்த அருமையான திட்டத்தினை இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்கள் சோதனை முயற்சியாக அமல்படுத்தின. இதற்கு பல நிறுவனங்களும் ஒப்புதலும் அளித்திருந்தன. இந்த திட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்றாலும் சம்பளம் குறைக்கப்படாது என்றும் கூறப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்தினை சேர்ந்த சுமார் 2900 பேர் இதில் பங்கேற்றனர். இவர்கள் 4 நாட்களில் 34 மணி நேரம் பணியாற்றினர். இதற்கிடையில் 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பெரும்பாலான இங்கிலாந்து நிறுவனங்கள் இந்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ளன.

job

இந்த சோதனையில் 61 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இதில் பணிபுரிந்த ஊழியர்களில் மொத்தம் 92% இந்த திட்டத்திற்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் இந்த திட்டம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.

இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வேலை, வாழ்க்கை சம நிலை ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 நாள் வேலை திட்டத்தில் மன அழுத்தம் என்பது கணிசமான குறைந்துள்ளதாகவும், 71% அதிகமான ஊழியர்கள் குறைந்த சோர்வே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கவலை, சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சனைகள் என்பது குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.பல நாடுகள் இதனை நிரந்தரமாக அமல்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இங்கிலாந்தின் வெற்றி பெற்றுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.  

இத்திட்டம் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள சில நிறுவனங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்றாலும் சம்பளம் குறைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட நிலையில், இங்கிலாந்தினை சேர்ந்த சுமார் 2900 பேர் இதில்  கலந்து கொண்டனர். அவர்கள்  4 நாட்களில் 34 மணி நேரம் பணி செய்தனர்.  

தொடர்ந்து 6 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பெரும்பாலான இங்கிலாந்து நிறுவனங்கள் இந்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இச்சோதனையில் 61 நிறுவனங்கள் மூலம்  பணிபுரிந்த ஊழியர்கள் கலந்து கொண்டதில் மொத்தம் 92%  பேர் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து ஊழியர்கள் மத்தியில் இத்திட்டம் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web