தாலி மஞ்ச வாசம் கூட போகலை... தேனிலவில் பிரிந்த தம்பதியரின் கடைசி காதல் வீடியோ!

 
 தாலி மஞ்ச வாசம் கூட போகலை... தேனிலவில் பிரிந்த தம்பதியரின் கடைசி காதல் வீடியோ!

அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 நாட்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணமானது.


காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் அரியானாவை சேர்ந்த 26 வயதான கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் உயிரிழந்தார். 7 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமான நிலையில், தேனிலவு கொண்டாட ஜம்மு காஷ்மீர் வந்தபோது மனைவி கண்முன்னே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் கணவனை இழந்த மனைவி அவர் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் உலுக்கியது.

 தாலி மஞ்ச வாசம் கூட போகலை... தேனிலவில் பிரிந்த தம்பதியரின் கடைசி காதல் வீடியோ!

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னர் இருவரும் ஜோடியாக ஒரு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அதில் ஷாருக்கானின் ஸ்டைலில் வினய் நர்வால் போஸ் கொடுக்கிறார். இருவரும் ஹீரோ ஹீரோயின் போல நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது சற்று வேதனையாக தான் உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?