திமுக கூட்டணியில் இருந்தாலும் விசிக கொடுமைகளை வேடிக்கை பார்த்ததில்லை... திருமாவளவன் பளிச்!

இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. கூட்டணி தர்மத்துக்காக விஜய் திறந்து வைத்த கதவையும் மூடினேன். பாமகவுடனும் சேரமாட்டோம், பாஜகவுடனும் சேரமாட்டோம், அந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் ‘I Don’ t Care’. நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன்.
கூட்டணியில் இருந்தாலும் இது வரையிலும் ஒரு பிரச்சனையிலும் விசிக பின்வாங்கியதில்லை. திமுக அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து, விடுதலைச்சிறுத்தைகள் போல் போராடிய கட்சி ஒரு கட்சியும் கிடையாது. அடுக்க முடியும், பட்டியல் போட முடியும். ஒருபோதும் இந்த கொடுமைகளை விசிக வேடிக்கை பார்த்ததில்லை” என ஆவேசமாக பேசியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!