14 நாட்களில் எவரெஸ்ட் சிகரம் அடைந்து இந்தியப் பெண் ஆசிரியை சாதனை !

 
எவரெஸ்ட் எவரெஸ்ட்

 

உத்தரபிரதேச மாநிலம் கோரக் பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது ஆசிரியை திவ்யா சிங் இமயமலையில் புதிய வரலாறு படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமிற்குச் சைக்கிள் மூலமாகச் சென்றடைந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். உலக அளவில் இந்தச் சாதனையைச் செய்த 2-வது பெண்மணி இவராவார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து தொடங்கிய இவரது பயணம் 14 நாட்கள் நீடித்தது.

இந்த நீண்ட பயணத்தில் மைனஸ் 12 டிகிரி வரையிலான கடும் குளிர் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு போன்ற சிக்கல்களை அவர் எதிர்கொண்டார். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை செங்குத்தான மலைப்பாதைகளில் சளைக்காமல் சைக்கிள் ஓட்டி இலக்கை அடைந்துள்ளார். சைக்கிள் செல்ல முடியாத கரடுமுரடான இடங்களில் அதைத் தனது தோளில் சுமந்தபடி முன்னேறியுள்ளார். சலேரி மற்றும் நம்ச்சே பஜார் உள்ளிட்ட பல சவாலான இடங்களைக் கடந்தே இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

எவரெஸ்ட் அடிவாரத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏந்தியபடி திவ்யா சிங் நிற்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இவரது இந்த அசாத்திய துணிச்சலைப் பலரும் பாராட்டித் தங்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இது இந்தியாவிற்கும் குறிப்பாக அவர் சார்ந்த மாநிலத்திற்கும் மிகுந்த பெருமை சேர்த்துள்ளது. இந்தச் சாதனை பல இளம் பெண்களுக்குத் துணிச்சலையும் புதிய தன்னம்பிக்கையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!