“ஒவ்வொரு வசனமும் இடியாய் இறங்கணும்...” தமிழ் புத்தாண்டில் வெளியாகிறது 'ஜன நாயகன்' கிளிம்ப்ஸ் வீடியோ!

 
ஜனநாயகன்
இந்த படம் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடவே எச்.வினோத் இயக்கம் என்பதால் 'ஜன நாயகன்' படத்தின் கிளிம்ப்ஸ் தமிழ் புத்தாண்டில் வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு வசனமும் இடியாய் இறங்கணும். அரசியலுக்கான அடித்தளத்தையும், தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் இந்த படத்தின் வசனங்கள் பிரதிபலிக்கணும் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வரப்படுகிறதாக கூறப்படுகிறது. 

ஜனநாயகன்

'ஜன நாயகன்' படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின. இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

விஜய்  ஜனநாயகன்

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் வசனங்களில் விஜய்யின் பங்களிப்பும் இருக்கிறது என்கிறார்கள். முக்கிய சம்பவங்கள், தனது கருத்துக்கள் என விஜய் ஒரு லிஸ்ட் கொடுத்திருப்பதாகவும், வசனங்களில் இந்த சமூக பிரச்சனைகள் எதிரொலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் விஜய் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web