தினமும் உல்லாசம்...இன்ஸ்டாவில் பழக்கம்... 2வது கணவரை உதறிவிட்டு நகைகளுடன் போலீஸ்காரருடன் ஓடிய இளம்பெண்!

 
கள்ளக்காதல் போலீசார்

பெங்களூருவில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் ஏற்பட்டப் பழக்கத்தால், திருமணமானப் பெண் ஒருவர் தனது இரண்டாவது கணவர் மற்றும் இரண்டு மகன்களைக் கைவிட்டுவிட்டு, மற்றொரு திருமணம் ஆனப் போலீஸ்காரருடன் நகை, பணத்துடன் ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒழுங்கீனச் செயல் காரணமாக அந்தப் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த மோனிகா (35) என்பவருக்கு ஏற்கனவே முதல் கணவரைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. தனது இரண்டு மகன்களுடன் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த மோனிகா, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வந்தார். அவரது வீடியோக்களைப் பார்த்து விருப்பம் தெரிவித்த, பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போலீஸ்காரர் ராகவேந்திரா, மோனிகாவுக்கு 'பாலோ ரிக்வஸ்ட்' அனுப்பியுள்ளார். மோனிகா, தான் இரு குழந்தைகளுக்குத் தாய் என்பதையும் மறந்து, ராகவேந்திராவின் ரிக்வஸ்டை ஏற்றுத் தனதுச் செல்போன் எண்ணையும் பகிர்ந்ததால், இருவருக்கும் இடையேப் பழக்கம் ஏற்பட்டது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

இந்தத் தொலைபேசிப் பழக்கம் விரைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடித் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததுடன், மோனிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கே ராகவேந்திராவை வரவழைத்துத் தனிமையில் இருந்துள்ளார். மேலும், கள்ளக்காதல் ஜோடி இருவரும் ஜோடியாக ரீல்ஸ் வீடியோக்களை எடுத்துச் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் வந்துள்ளனர்.

இதற்கிடையில் ராகவேந்திராவுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோனிகா தனது வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போலீஸ்காரர் ராகவேந்திராவுடன் ஓடிவிட்டார்.

கள்ளக்காதல்

மனைவி மற்றும் மகன்களைக் கைவிட்டுவிட்டு ஓடிய மோனிகாவின் இரண்டாவது கணவர், சந்திரா லே-அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் ஜோடியைத் தேடி வருகின்றனர். மேலும் இந்த ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராகவேந்திராவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!