தமிழகம் முழுவதும் இவிஎம் சரிபார்ப்பு பணி 11ம் தேதி தொடக்கம்!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாகி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட நடவடிக்கைகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அதன்படி, வரும் 11-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இவிஎம் (மின்னணு வாக்கு எந்திரங்கள்) சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
