அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பெண்ணின் கன்னத்தில் சராமாரியாக தாக்குதல் ... பெரும் பரபரப்பு!
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தின் காமனேரி கிராமத்தில் நடைபெற்று வந்த தார்சாலை பணியில், வீட்டை ஒட்டி சாலை போட வேண்டாம் என கூறிய மூதாட்டி சரோஜா (60) தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் பணியில் ஈடுபட்டவர்களிடம் “சற்று தள்ளி சாலை போடுங்கள்” என அவர் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்ததும் அதிமுக முன்னாள் எம்பி, எம்எல்ஏ அர்ஜுனன் சம்பவ இடத்துக்கே சென்று சரோஜாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்ததுடன், ‘என் நிலத்தில் சாலை போட சொல்லுகிறாயா?’ என கூறி அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சரோஜாவின் புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் கொரோனா காலத்தில் டோல்கேட்டில் போலீசாரை தாக்கிய வழக்கிலும் அர்ஜுனன் செய்தி தலைப்புகளில் இடம்பிடித்திருந்தார். அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் பல பதவிகளில் இருந்த இவர், தற்போது அரசியலில் இருந்து விலகி விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
