அரையாண்டு தேர்வு ஒத்தி வைப்பு... விடுமுறையில் மாற்றம் வருமா?

 
தேர்வு

தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத புயல் மழை காரணமாக  டிசம்பர் 18ம் தேதி முதல்  பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே வினாத்தாள் முறையில் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தன. சென்னை உட்பட வட மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக இந்த தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டன. தற்போது தென் மாவட்ட மழை காரணமாக இந்த மாவட்ட பள்ளிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.   6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் மீதமுள்ளன.  

 

 விடுமுறை

11, 12 ம்  வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல்  தேர்வுகள் மிச்சம் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி உடனடி  இயல்பு நிலைக்கான வாய்ப்புக்கள் மிகமிகக் குறைவு. பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மழையால் சேதம் அடைந்து மழை வெள்ளதால்   அடித்து செல்லப்பட்டுவிட்டன. இதனால்  சில மாவட்ட மாணவர்களுக்கு மீண்டும் பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. அதற்கு உரிய கணக்கெடுப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ”தென் மாவட்டங்களில் முதலில் இயல்பு நிலை திரும்பட்டும்.  பள்ளிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதனைப் பொறுத்தே  எஞ்சிய அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது குறித்து உறுதியான முடிவு அறிவிக்கப்படும்.   தேர்வு நடைபெற்று வரும்  மாவட்டங்களுக்கு டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்நாட்களில் தென் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுமுறையாக இருக்குமா? இல்லை தேர்வுகள் நடத்தப்படுமா? என கேள்விகள் எழுந்துள்ளன.  அரையாண்டு விடுமுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பொதுவாகவே இருக்கும். எஞ்சிய தேர்வுகள் புத்தாண்டில் நடத்துவதற்கே வாய்ப்புக்க இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web