மாப்பிள்ளை கண் எதிரிலேயே மணமகளைக் கடத்திச் சென்ற முன்னாள் காதலன்!!

 
மணமகள் திருமணம் கடத்தல்

மாப்பிள்ளை கண் எதிரிலேயே ஊர்வலத்தின் போது, நடுரோட்டில் வைத்து துப்பாக்கி முனையில் மணக்கோலத்தில் இருந்த மணமகளை திரைப்பட பாணியில் முன்னாள் காதலன் கடத்திச் சென்ற சம்பவம் ஒடிசா மாநிலம், பலங்கீர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பலங்கீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இளைஞர் ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மணமக்களின் வாகனத்தை இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அதில் அந்தப் பெண்ணின் முன்னாள் காதலனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காதலன் காதல் கடத்தல்

மணமகனைத் துப்பாக்கி முனையில் மிரட்டி காரிலிருந்து இறக்கிய அந்தக் கும்பல், மணக்கோலத்தில் இருந்த மணமகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தங்களது வாகனத்தில் கடத்திச் சென்றனர். தனது கண் முன்னாலேயே மனைவி கடத்தப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகன், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள பலங்கீர் மாவட்ட போலீசார், அந்தப் பகுதியின் எல்லைகளை மூடித் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் காதலன் திருமணத்தை நிறுத்தத் திட்டமிட்டாரா அல்லது முன்விரோதம் காரணமா என்பது குறித்துப் போலீசார் விசாரித்து வருகின்றனர். மணக்கோலத்தில் இருந்த பெண்ணைக் கடத்திய இந்தச் சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!