பரபரப்பு!! சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

 
நீலகிரி

தமிழகத்தில் வளர் இளம் பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சத்து மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தினசரி உணவுக்கு பின் சாப்பிட அறிவுறுத்தி  சுகாதாரத் துறை மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் இரும்புச்சத்து மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஆம்புலன்ஸ்

மொத்தமாக  249 மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு தலா 50 மாத்திரைகள் வழங்கப்பட்டன.  ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வகுப்பு நேரத்தில் மாணவிகள் மாத்திரைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. அதன்படி  8 ம் வகுப்பு படிக்கும் 4  மாணவிகள், யார் அதிக மாத்திரைகளை உட்கொள்கிறார்கள் என போட்டி ஒன்றை உருவாக்கினர். போட்டியில் வெற்றி பெற கையில் இருந்த 50 மாத்திரைகளில் ஒவ்வொன்றாக எடுத்து விழுங்கத் தொடங்கினர்.

சிறிது நேரத்தில் வகுப்பறையிலேயே இந்த 4  மாணவிகளும் மயங்கி விழுந்து விட்டனர். சகமாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்ததன் பேரில் உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு  மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உதகை அரசு மருத்துமனை முதல்வர் கூறுகையில், ”தற்போது மாணவிகள் நிலை நன்றாக உள்ளது.

மாத்திரை

மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்கு பின்னர்தான் அதன் வீரியம் தெரியவரும். மாணவிகள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ” எனத் தெரிவித்துள்ளார். 
சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறுகையில், ”குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு கொடுத்தது தவறான செயல்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web