பரபரப்பு!! ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கம்!!

 
ராகுல் காந்தி

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம்  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது . இந்த தீர்ப்பு பல்வேறு சர்ச்சை கருத்துக்களையும், எதிர்ப்பலைகளையும் கிளப்பியுள்ளது.  இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர்.

ராகுல் காந்தி

எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என சட்டம் வகுக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக  மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி

 மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த உத்தரவு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web