நெல்லையில் பரபரப்பு... தடுக்கி விழுந்த விஜய்... வைரலாகும் வீடியோ!

 
விஜய்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று நடிகர் விஜய், நலத்திட்ட உதவிகள் வழங்க அரங்கத்திற்குள் வந்தபோது, திடீரென தடுக்கி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜய் குறித்து சர்ச்சையைக் கிளப்பிய சன்டிவி, தற்போது இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. நடிகர் விஜய் இன்று நெல்லை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். நிவாரணப் பொருட்கள் வழங்கி முடித்த பின்பு அங்கிருந்த மக்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்குமாறு நடிகர் விஜய் முன்பு தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.


இந்த நிலையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரணப் பொருட்களை நடிகர் விஜய் வழங்கி உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலம் சென்ற நடிகர் விஜய் அங்கிருந்து காரில் சாலைமார்க்கமாக நிவாரணப் பொருட்கள் வழங்கும் இடத்திற்கு சென்றுள்ளார்.

விஜய்

அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்தநிலையில் நடிகர் விஜய் அரங்கத்திற்குள் வந்ததும் கதவு உடனடியாக மூடப்படவே, நிலைத் தடுமாறிய விஜய் கீழே விழயிருந்தார். உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். பின்னர் நடிகர் விஜய் சுதாரித்தார். இதைத் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், வீடுகளை இழந்தவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கினார் நடிகர் விஜய்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web