தவெகவில் பரபரப்பு... விஜய் காரை முற்றுகையிட்ட அஜிதா தற்கொலை முயற்சி.. ஐசியூவில் அனுமதி!

 
அஜிதா ஆக்னல்

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் மனமுடைந்து தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெக-வில் தீவிரமாகப் பணியாற்றி வந்தவர். தமக்குத் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார். ஆனால் கட்சித் தலைமை அவருக்குப் பதவி வழங்காததால் அதிருப்தி அடைந்த அவர், நேற்று முன்தினம் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கட்சித் தலைவர் நடிகர் விஜய்யின் காரையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது பெரும் செய்தியானது.

அஜிதா ஆக்னல்

போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக அஜிதா ஆக்னல் கடும் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சமூக வலைதளங்களில் அவர் "திமுக-வின் கைக்கூலி" என்றும், கட்சியை உடைக்க முயல்வதாகவும் சில தரப்பினர் அவதூறு பரப்பியதாகத் தெரிகிறது. இதனால் வேதனையடைந்த அவர், கடந்த மூன்று நாட்களாக உணவு அருந்தாமல் இருந்துள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் சுமார் 15 தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அஜிதா, மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டுத் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தவெக அஜிதா

தவெக கட்சி தொடங்கப்பட்டு முதற்கட்டமாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், பதவிக்காக ஒரு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி எடுத்திருப்பது அக்கட்சியின் உட்கட்சி பூசலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மருத்துவமனை முன்பு அஜிதாவின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு கருதி போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!