கள்ளக்காதலியைக் கொன்று உடலை எரித்த முன்னாள் போலீஸ்காரர் - பரபரப்பு வாக்குமூலம்!

 
கள்ளக்காதலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஒரு பெண் சடலமாகக் கிடந்த வழக்கில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் கள்ளக்காதலரும், விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரருமான சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணையில் பணப் பிரச்சினைக்காக இந்தக் கொலையைச் செய்ததாகப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகே வனப்பகுதியில் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி உடல் கருகிய நிலையில் ஒரு பெண் சடலமாகக் கிடந்தார். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த வடிவுக்கரசி (45) என்பதும், இவரைக் கடைசியாக அழைத்து வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் (55) என்பதும் சி.சி.டி.வி. பதிவுகள் மூலம் தெரியவந்தது.

கள்ளக்காதல்

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் கைது செய்தனர். கைதான சங்கர், 1998-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரர் ஆவார். அவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், “எனக்கும் வடிவுக்கரசிக்கும் கள்ளக்காதல் இருந்தது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரும் பணம் வாங்கினோம். அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்ட நிலையில், பணம் கொடுத்தவர்கள் வடிவுக்கரசியைத் தொந்தரவு செய்தனர். இதனால் வடிவுக்கரசி என்னிடம் பணத்தைத் திருப்பி கேட்டதால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

கொலைச் செயல்: பணம் கேட்டுத் தொந்தரவு செய்வதைத் தவிர்க்க அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். கடந்த 5-ஆம் தேதி அவரை வட்டமலை அணை பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தினோம். அங்கே தகராறு ஏற்படவே, அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து வடிவுக்கரசியின் தலையில் போட்டுக் கொன்றேன். அதன்பிறகு அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையைப் பறித்துக்கொண்டேன். அவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு முகத்தை சிதைத்துத் தீ வைத்து எரித்துவிட்டுத் தப்பிச் சென்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

சங்கரிடம் இருந்து 6 பவுன் நகையைப் பறிமுதல் செய்த போலீசார், அவரைக் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். கொலை செய்யப்பட்ட வடிவுக்கரசிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!