சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீர் வெளிநடப்பு... நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீரென்று வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது, நிர்வாகிகளுக்கு இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நிர்வாகிகள் சிலர் சீமானை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த சாட்டை துரைமுருகன், நிர்வாகிகளை கூட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் லேசான கைகலப்பு ஏற்பட்டது. சீமானும் அவர்களை சமரசப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் முடியாததால் அவரும் நிர்வாகிகளை வெளியே செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், இளைஞர் அணி செயலாளர் பர்வின் ஆகியோரும், அவர்களுடன் சேர்ந்து சிலரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், நாம் தமிழர் கட்சி கூட்டம் எந்த சலசலப்பும் இன்றி அமைதியாக நடைபெற்றதாக தெவித்தனர். நெல்லையில் சீமான் பங்கேற்ற கூட்டத்தில் நிர்வாகிகள் திடீரென்று வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
