எதிர்க்கட்சிகளிடையே எகிறும் எதிர்பார்ப்பு... இன்று வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை!

 
  எதிர்க்கட்சிகளிடையே எகிறும் எதிர்பார்ப்பு... இன்று வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணை!

இந்தியாவில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டு  ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுடன் சட்டம் ஆக்கப்பட்டுள்ளது.  அந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி  தி.மு.க., த.வெ.க. உட்பட எதிர்க்கட்சிகளும்,   தொண்டு நிறுவனங்களும் என 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

வக்ஃபு திருத்த மசோதா
இந்த மனுக்கள் மீதான விசாரணை ஏப்ரல் 17ம் தேதி தொடங்கியதில்  அதில் 5 மனுக்களை மட்டும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கை  15ம் தேதி மீண்டும் விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு குறித்த விசாரணைக்காக 20ம் தேதி இன்று செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர். 

வக்ஃபு

அதன்படி, வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை நடைபெற உள்ளது.  இந்த மனுக்கள் தலைமை நீதிபதி கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.  விசாரணை முடிவில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது