சாலையில் வீசப்பட்ட காலாவதியான இருமல் மருந்துகள்!
புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் சாலையில் கொட்டப்பட்ட காலாவதியான இருமல் மருந்துகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிஜாம் காலனி பிரதான சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் குப்பைகள் அடிக்கடி கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட காலாவதியான இருமல் மருந்து பாட்டில்கள் சாலை ஓரமாக சிதறி கிடந்தன. அந்த இடத்தில் மாடுகள், நாய்கள், குரங்குகள் சுற்றித் திரியும் நிலையில், சில பாட்டில்களை குரங்குகள் தூக்கிச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலாவதியான மருந்துகளை விலங்குகள் குடிக்கும் அபாயமும், சிறுவர்கள் தவறுதலாக அருந்தும் ஆபத்தும் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மருந்துகளை அகற்ற வேண்டும் என்றும், சுகாதாரத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
