SIR படிவங்களுக்கான கால அவகாசம் நிறைவு... ஒரே நாளில் 80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்களா?

 
வரைவு வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான (SIR) கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கணக்கீட்டுப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் உள்ள சுமார் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவம் விநியோகிக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதேபோல, கணக்கீட்டுப் படிவங்களைப் பதிவேற்றும் பணியும் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது.

வாக்காளர் சரிபார்ப்பு தேர்தல் சார் SIR

இந்தச் சிறப்புத் திருத்தப் பணியின் முடிவில், வரவிருக்கும் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர்கள்: 26 லட்சம் பேர். கண்டுபிடிக்க முடியாதவர்கள்/ஆப்செண்ட் ஆனவர்கள்: 9 லட்சம் பேர். நிரந்தரமாக இடம் மாறிச் சென்றவர்கள்: 41 லட்சம் பேர். இரட்டைப் பதிவுகள்: 4 லட்சம் பேர் இவற்றை எல்லாம் சேர்த்து, மொத்தம் 80 லட்சம் பேர் வரை வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

sir

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட பிறகு, அதில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் அல்லது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து ஆட்சேபனைகள் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் குறித்த பரிசீலனைகள் நடைபெற்ற பின்னர், பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!