கேரளாவில் தேவாலயத்தில் வெடிவிபத்து... திருவிழா பட்டாசு தயாரிப்பின் போது விபரீதம் - ஒருவர் பலி; ஒருவர் கவலைக்கிடம்!!

 
வெடி விபத்து

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இன்று காலை நிகழ்ந்த வெடி விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடதி கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் ஆண்டுத் திருவிழா நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை முதலே வழிபாட்டுத் தலத்தின் வளாகத்திற்குள்ளேயே பட்டாசு தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இன்று காலை சுமார் 8 மணி அளவில், ரவி (68) மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் வெடி மருந்துகளைக் கையாண்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பட்டாசுகள் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.

வெ

இந்த விபத்தில் சிக்கிய ரவி (68) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த ஜேம்ஸ் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் தற்போது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெ

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். முறையான அனுமதியின்றி வழிபாட்டுத் தலத்திற்குள் பட்டாசு தயாரிக்கப்பட்டதா? பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவிழா உற்சாகத்தில் இருந்த கிராம மக்கள், இந்தத் துயரச் சம்பவத்தால் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!