தொடரும் சோகம்... தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து... 5 பேர் பலி !

 
பட்டாசு

விருதுநகர் மாவட்டத்தில்  சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பலரும் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இ  மளமளவென எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

உத்தரபிரதேச போலீஸ்

இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது