தொழிற்சாலையில் வெடிவிபத்து... 17 பேர் பலி, 18 பேர் படுகாயம்!

 
pattasu

மகாராஷ்டிர மாநிலம் கடோல் பகுதி ரவுல்கான் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.பி.எல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் டெட்டனேட்டர் பேக்கிங் யூனிட்டில் காலை 7 மணி முதல் 7.15 மணி வரை விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்து நாக்பூர் நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அணிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் விபின் இடங்கர் மற்றும் எஸ்.பி. ஹர்ஷ் போடர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!