எகிறியடிக்கும் எல் அண்ட் டி ரூ. 4 லட்சம் கோடி.... புதியதாக ரூ 2,500 கோடி மதிப்புள்ள ஆர்டர்!!

 
லார்சன் அண்ட் டர்போ


லார்சன் & டூப்ரோ லிமிடெட்டின் பவர் டிரான்ஸ்மிஷன் & டிஸ்ட்ரிபியூஷன் பிசினஸ் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய கிழக்கில், பெரிய தொழில்துறை வசதிகளில் மின்சார நெட்வொர்க்குகளை மேம்படுத்துவதற்கான இரண்டு ஆர்டர்களை வென்றுள்ளது. இந்த ஆர்டர்களின் நோக்கம் தொடர்புடைய உயர் மின்னழுத்த கேபிள் அமைப்புகளுடன் எரிவாயு இன்சுலேட்டட் துணை மின்நிலையங்களை நிறுவுவதை உள்ளடக்கியது. பவர் டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை வேலைகளின் ஒரு பகுதியாக நிறுவப்படும் மற்ற முக்கியமான கூறுகளாக திகழ்கிறது.

லார்சன் அண்ட் டர்போ


இந்தியாவில், 765kV டிரான்ஸ்மிஷன் லைன் கட்டுவதற்கான ஆர்டரும் பெறப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்னூலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள காற்று மற்றும் சூரிய ஆற்றல் மையத்திலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வெளியேற்றுவதற்கு டிரான்ஸ்மிஷன் லைன் உதவும் எனவும் தெரிகிறது. சமீபத்தில், லார்சன் & டூப்ரோ மற்றும் டிஆர்டிஓ இரண்டு ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன் (ஏஐபி) சிஸ்டம் மாட்யூல்களை இந்தியக் கடற்படையின் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், Aramco மற்றும் Saudi Vision 2030ன் IKTVA முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியாவில் ஒரு புதிய அதிநவீன, மேம்பட்ட ஹெவி வால் பிரஷர் வெசல் வசதியை திறந்து வைத்து, L&T தனது ஹைடெக் உற்பத்தி திறனை விரிவுபடுத்தியுள்ளது.

லார்சன் அண்ட் டர்போ


நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் பங்குகள் 0.41சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கிற்கு ரூபாய் 2,387.80 ஆக நிறைவு செய்த்தது. லார்சன் & டூப்ரோ லிமிடெட் ஒரு முன்னணி இந்திய பன்னாட்டு நிறுவனமாகும், முக்கியமாக EPC திட்டங்கள், ஹைடெக் உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. நிறுவனம் 4 லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் புத்தகத்தை பதிவு செய்துள்ளது மற்றும் FY23க்கான ஆர்டர் வரத்து 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது (இது 19 சதவிகிதம் ஆண்டு வளர்ச்சி). ஒரு வருடத்தில் பங்கு 22 சதவிகிதம் உயர்ந்துள்ளது மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் 150 சதவிகிதத்திற்கும் அதிகமான மல்டிபேக்கர் வருமானத்தை வாரி வழங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை தங்கள் கண்காணிப்புப் பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web