எகிறியடித்த எல்.ஐ.சி... நல்ல பாதையில் செல்கிறதா? நாட்டிற்கு நல்லதா?!

 
சூப்பர் ஆபர்! எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு கொரோனா கால சிறப்பு சலுகை!

நாட்டின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளர்களான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), மார்ச் 31, 2023ல் முடிவடைந்த நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளில் இருந்து கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெற முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தை மிகவும் ஏற்ற இறக்கமாக இருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், உலகளாவிய வட்டி விகிதங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம் போன்றவை கச்சா எண்ணெய் போட்டி என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

இருப்பினும், BSE சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் லாபத்துடன் முடிவடைந்த நேரத்தில், கடந்த 12 மாதங்களில் இன்சூரன்ஸ் மேஜரின் போர்ட்ஃபோலியோவில் இரண்டு ஸ்மால்கேப்கள் 160 சதவிகிதம் வரை அதிகரித்தன. காப்பீட்டு நிறுவனத்திற்கு வலுவான நிலையை வழங்கிய முக்கிய ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளின் பட்டியல் கீழே உள்ளது.

யூகோ வங்கி

கிர்லோஸ்கர் : போர்ட்ஃபோலியோவில் கிர்லோஸ்கர் எலெக்ட்ரிக் நிறுவனம் முதலிடம் பிடித்தது. ஒரு வருடத்திற்கு முன்பு ரூபாய் 26.15 ஆக இருந்த ஸ்கிரிப் மார்ச் 31, 2023 அன்று 160 சதவீதம் உயர்ந்து ரூபாய் 68.14 ஆக இருந்தது. டிசம்பர் 2022 நிலவரப்படி, கிர்லோஸ்கர் எலக்ட்ரிக் நிறுவனத்தில் எல்ஐசி 1.26 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. மார்ச் 31, 2023 அன்று நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூபாய் 452.5 கோடியாக இருந்தது.

கர்நாடக வங்கி : பட்டியலில் கர்நாடகா வங்கி அடுத்த இடத்தில் உள்ளது. FY23ல் கடன் வங்கியின் பங்குகள் 146 சதவீதம் முன்னேறின. கடந்த 12 மாதங்களில் ரூபாய்55.40ல் இருந்து ரூபாய் 136 ஆக அதிகரித்துள்ளது. டிசம்பர் 2022 நிலவரப்படி எல்ஐசி வங்கியில் சுமார் 4.67 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

Standard Industries : இந்த ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் எல்ஐசி 1.27 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தது. தற்போதைய சந்தை மதிப்பான ரூபாய் 166.5 கோடியில், இந்த பங்கு மார்ச் 31, 2023 அன்று 115 சதவீதம் உயர்ந்து ரூபாய் 25.9 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் ரூபாய்12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில் விகாஸ் நிகம் (RVNL) : டிசம்பர் 2022 உடன் முடிவடைந்த காலாண்டில் எல்ஐசி உள்கட்டமைப்பு பொதுத்துறை நிறுவனத்தில் 6.38 சதவீத உரிமையைப் பெற்றுள்ளது. மார்ச் 31, 2022 முதல் RVNL இன் பங்குகள் ஒரு வருடத்தில் 110 சதவீதம் அதிகரித்து ரூபாய் 32.7ல் இருந்து ரூபாய் 68.6 ஆக உயர்ந்துள்ளது.

கோயல் க்ரீன்

UCO வங்கி : பொதுத்துறை வங்கி கடந்த நிதியாண்டில் 105 சதவிகிதம் லாபம் ஈட்டியுள்ளது. 23ம் நிதியாண்டில் ரூபாய் 11.87-ல் இருந்த பங்கு ரூபாய் 24.38க்கு உயர்ந்தது. மார்ச் 31, 2022 அன்று யூகோ வங்கியின் சந்தை மூலதனம் ரூபாய் 29,148 கோடியாக இருந்தது. டிசம்பர் 31, 2022 நிலவரப்படி எல்ஐசி வங்கியில் 1.24 சதவிகித பங்குகளைக் கொண்டிருக்கிறது.

எல்ஐசியின் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் போர்ட்ஃபோலியோவில் தி சவுத் இந்தியன் வங்கி (94 சதவிகிதம் வளர்ச்சி), இந்தியன் வங்கி (87 சதவிகிதம் வளர்ச்சி), சென்னை பெட்ரோலியம் (86 சதவிகிதம் வளர்ச்சி), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (84 சதவிகிதம் உயர்வு), பாரத் டைனமிக்ஸ் (81 சதவிகிதம் உயர்வு) மற்றும் தி பாஸ்பேட் நிறுவனம் (80 சதவிகிதம் உயர்வு கண்ட பிற நிறுவங்களாக திகழ்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web